Connect with us
 

News

அஜித் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக வெளியாகுமா வலிமை !

Published

on

அஜித்குமார் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு சண்டைக்காட்சி மட்டுமே மீதமுள்ளது. அதை இந்த மாத இறுதிக்குள் முடித்துவிட்டு டப்பிங், இசை கோப்பு, கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழி நுட்ப பணிகளை ஆரம்பிக்க உள்ளனர்.

வலிமை படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. அஜித் குமார் திரையுலகுக்கு வந்து 29 ஆண்டுகள் நிறைவானத்தை கொண்டாடும் வகையில் வலிமை படத்தின் முதல் பாடல் நாங்க வேற மாறி என்ற பாடலையும் வெளியிட்டது படக்குழு.

இந்தநிலையில் வலிமை படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது. ரசிகர்களுக்கும் வலிமை படத்தை தீபாவளிக்கு வெளியிடுங்கள் என்று பதிவுகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.

சினிமா வட்டாரத்தில் விசாரித்த போது வலிமை கண்டிப்பாக தீபாவளிக்குதான் வெளியாகும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.