News

இரவின் நிழல் படத்தில் ராஜமாதாவாக வரலட்சுமி சரத்குமார் !

Published

on

Varalaxmi Sarathkumar தைரியமான ராஜமாதா கதாப்பாத்திரத்தில் இரவின் நிழல் படத்தில் நடிக்கிறார்.

இயக்குநர் ஆர்.பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இரவின் நிழல். சினிமா ஆரம்பித்த காலத்திலிருந்து இது போன்ற ஒரு முயற்சியை யாரும் செய்யவில்லை அப்படி ஒரு உலக சாதனை படமாக இப்படம் வெளியாகவுள்ளது ஜூலை 15-ம் தேதி.

இரவின் நிழல் திரைப்படம் உலகத்திலேயே முதல் முறையாக எடுக்கப்பட்ட நான் லீனியர் திரைப்படம் என்ற மிகப்பெரிய சாதனையுடன் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரின் பெயரையும் போஸ்டர்கள் வடிவில் வெளியிட்டு விளம்பரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் நடிகை Varalaxmi Sarathkumar ‘பிரேமகுமாரி’ என்கிற ராஜமாதா என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளாராம். மிகவும் தைரியம் கொண்ட ஒரு கதாப்பாத்திரமாக இவரின் கதாப்பாத்திரம் மிகவும் தைரியமான பெண் உருவமாக படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது !

Trending

Exit mobile version