News
பொங்களுக்கு வாரிசு – துணிவு மோதுவது உறுதி !

பொங்கள் பண்டிகைக்கு விஜய் நடிக்கும் வாரிசு மற்றும் அஜித் நடிக்கும் துணிவு ஆகிய இரண்டு படங்கள் மோதுவது உறுதி என திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
அஜித்தின் துணிவு திரைப்படன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்தது. இதனால் வாரிசு படத்துடன் துணிவு பொங்களுக்கு மோதுவது உறுதி. ஒரே நாளில் இந்த இரு படங்களும் வெளியாவதால் கடும் போட்டி நிலவும் என கூறப்படுகிறது.
இவர்களின் படங்கள் நேருக்கு நேர் மோதியது 2014-ம் ஆண்டு விஜய்யின் ஜில்லா அஜித்தின் வீரம் படமும் அதன் பின்னர் 7 வருட இடைவெளிக்கு பின்னர் இந்த இரு படங்களும் வெளியாகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அதை உறுதி செய்துள்ளார். இவர் அளித்த பேட்டியில் ஜனவரி 12-ம் த்ந்ந்தி துணிவு திரைப்படமும் ஜனவரி 13-ம் தேதி வாரிசு திரைப்படம் வெளியாகும். கண்டிப்பாக இந்த இரு திரைப்படங்களும் சமமான திரையரங்கு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.