News
அமெரிக்காவிலும் துணிவு வசூலை முந்தும் வாரிசு !

வெளிநாடுகளில் தமிழ் படங்கள் அதிக அளவு விற்பனையாகும் நாடுகளில் ஒன்று அமெரிக்கா. கடந்த கடந்த வாரம் விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு இரண்டு படங்களுக்கு நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் வெளியானது.
இந்த நிலையில் அமெரிக்காவில் இரண்டு படங்களின் வசூலை வினியோஸ்தர்கள் அறிவித்துள்ளனர். அதன்படி துணிவு திரைப்படம் 7 லட்சம் டாலர்களை வசூல் செய்துள்ளதாம் அதாவது இந்திய மதிப்பில் 7 கோடியே 70 லட்சம். அமெரிக்காவில் அஜித்தின் படங்களின் டாப் வசூல் இதுதானாம்.
வாரிசு மற்றும் வாரசுடு இரண்டும் சேர்த்து 9 லட்சத்து 50 ஆயிரம் டாலர்களை வசூல் செய்துள்ளது. இந்திய மதிப்பில் 7 கோடியே 69 லட்சம் என்று வாரிசு படத்தை வெளியிட்ட ஷ்லோகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
துணிவு படத்துடன் ஒப்பிட்டு பார்கையில் அமெரிக்காவில் வாரிசு திரைப்படம் வசூல் முந்து வருகிறது என்றும் விரைவில் 1 மில்லியன் டாலர் வசூலை பெறும் எனவும் கூறப்படுகிறது.