Reviews

வாரிசு – விமர்சனம் !

Published

on

Movie Details

இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ள திரைப்படம் வாரிசு.

விஜய் அப்பா மிகப்பெரிய பிசினஸ்மேன். இவருக்கு மூன்று மகன்கள் மூத்த மகன் ஶ்ரீகாந்த், இரண்டாம் மகன் ஷாம், கடைக்குட்டி மகன் விஜய். அப்பாவின் விருப்பத்திற்கு மாறாக தன் விருப்பப்படி தன் வாழ்க்கையை வாழ நினைக்கிறார். இதனால் 7 வருடங்களாக குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். தன் அப்பா, அம்மாவின் 60-தாம் கல்யாணத்திற்காக அம்மாவின் வற்புறுத்தலால் மீண்டும் வீட்டிற்கு வருகிறார் விஜய்.

இதற்கிடையில் சரத்குமாருக்கு குணபடுத்த முடியாது கேன்சர் இருப்பது சரத்குமார் நண்பர் பிரபு டாக்டர் மூலம் தெரிய வருகிறது. இந்த விஷயத்தை விஜய்யிடம் மட்டும் சொல்கிறார் பிரபு. அது மட்டுமில்லாமல் சரத்குமாரின் தலைவர் பதவிக்கு விஜய்யை நிர்ணயிக்கிறார். இது பிடிக்காத ஶ்ரீகாந்த் மற்றும் ஷியாம் வீட்டை விட்டு வெளியே சென்று சரத்குமாரின் பரம எதிரியான பிரகாஷ் உடன் சேர்கிறார்கள். அதன் பின்னர் இவர்களை எப்படி சமாளித்து அண்ணன்களை திருத்தி பிரகாஷ்சை வென்றார் என்பதே மீதிக்கதை.

விஜய்க்கு குடும்ப உரவுகளை சுமக்கும் அழுத்தமான ஒரு கதாப்பாத்திரம்.அதை தனக்கே உரிய பாணியில் கெத்தாக செய்து இருக்கிறார். நடன காட்சிகள், பஞ்ச் வசனங்கள் என அனைத்து இடங்களிலும் ஆரவாரம் செய்கிறார். சண்டை காட்சிகளில் அனல் பறக்க விடுகிறார். குறுப்புத்தனங்களில் சிரிக்கவும் வைக்கிறார். அப்பா, அம்மாவுடனான விஜய்யின் அந்த சென்டிமென்ட் காட்சிகளில் நம்மை உருக வைக்கிறார்.

ராஷ்மிகா மந்தனாவுக்கு சில இடங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு. இவருக்கும் விஜய்க்கும் உண்டான அந்த காதல் காட்சிகள் நன்றாக வந்துள்ளது. தந்தையாக வரும் சரத்குமார் தனது அனுபவ நடிப்பால் உயர்ந்து நிற்கிறார். ஆரம்பத்தில் பணக்கார மிடுக்கோடு வரும் அவர் மனகன்கள் தனக்கு குழிபறிப்பதை தெரிந்து உடைந்து போவதும், வீட்டில் என்னுடன் இருக்க முடியுமா என விஜய்யிடம் கெஞ்சி கேட்பது அதை ஏற்ற மறுக்காமல் விஜய் வீட்டை விட்டு வெளியே போகும் போது கனத்தை இதயத்தோடு நின்று பார்ப்பவு என காட்சிக்கு காட்சி மனதில் நிறைகிறார்.

கார்பரேட் வில்லனாக வரும் பிரகாஷ்ராஜ் மிரட்டுகிறார். விஜய்யின் அம்மாவாக வரும் ஜெயசுதா பாசத்தால் நம்மை உருக வைக்கிறார். யோகிபாபு சிரிக்க வைக்கிறார். பிரபு, ஷாம், ஶ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, வி.டி.வி.கணேஷ், ஶ்ரீமன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

சிறப்பு தோற்றத்தில் வரும் எஸ்.ஜே.சூர்யா சிறிது நேரம் வந்தாலும் தெறிக்க விடுகிறார். குஷ்பு படத்திலேயே இல்லை என்னாதது இவரின் காட்சி.

ஆரம்பம் காட்சிகள் மெதுவாக நடர்ந்தாலும் போக போக வேகம் எடுக்கிறது. படத்தின் நீளம் படத்தின் ஒரு சிறு குறையாக இருக்கிறது. குடும்பம், சென்டிமென்ட், காதல், காமெடி, அதிரடி, பஞ்ச் வசனம் என அனைத்தும் கலந்து ரசிக்கும்படி கதை சொல்லி இருக்கிறார் வம்சி பைடிபள்ளி. மாஸ் நடிகரான விஜய்யை வைத்து ஒரு நேர்த்தியான குடும்ப படம் கொடுக்க வேண்டும் என்ற நினைத்து அதில் வெற்றியும் கண்டு இருக்கிறார் வம்சி.
Varisu Review By CineTime

கார்த்திக் பழனிவேல் ஒளிப்பதிவு ஒரு ஒரு காட்சிகளிளும் நம்மை மிரள வைக்கிறது. தமன் இசையில் பாடல்கள் முக்கியமான பின்னணி இசை படத்தின் இருதயம்.
[wp-review id=”45085″]

Trending

Exit mobile version