Reviews
வருணன் – திரைவிமர்சனம் !
Cast: Radha Ravi, Charanraj, Dushyanth Jayaprakash, Gabriella, Shankarnag Vijayan, Haripriya, Maheshwari, jiva Ravi, Arjunna Keerthivasan, Hyde Karty, Priyadharsan, Dumkan Maari.
Production: Yakkai Films
Director: Jaayavelmurugun
Screenplay: Jaayavelmurugun
Cinematography: S Srirama Santhosh
Editing: U Muthayan DFT
Music: Bobo Shashi
Language: Tamil
Runtime: 2H
Release Date: 14 March 2025
சென்னை ராயபுரம் பகுதியில் ராதாரவி மற்றும் சரண்ராஜ் இருவரும் தண்ணீர் கேன் போடும் வியாபாரம் செய்கின்றனர். ராதாரவியிடம் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் தண்ணீர் கேன் போடும் வேலை செய்து வருகிறார். மற்றொருபுறம் சரண்ராஜின் மனைவி மகேஸ்வரி, அவரது சகோதரர் சங்கர் நாக்விஜயன் இருவரும் தண்ணீர் கேன் உடன் சேர்த்து சுண்ட கஞ்சி வியாபாரம் செய்கின்றனர். அவர்களை மதுவிலக்கு போலீஸ் அதிகாரியான ஜீவா ரவி கண்காணித்துக் கொண்டே இருக்கிறார். இதனிடையே துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், கேபிரில்லாவை காதலித்து வருகிறார். இந்த நிலையில் அடிக்கடி இரண்டு கோஷ்டிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கொண்டே இருந்தது. அதன் பிறகு என்ன நடந்தது? இந்த மோதலின் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதி கதை.
படம் எப்படி இருக்கு
தில்லையாக வரும் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், இயக்குநர் கேட்டதைக் கொடுத்திருக்கிறார். நடிகர் ராதாரவி மற்றும் நடிகர் சரண்ராஜ் இருவரும் அனுபவம் நடிப்பை கொடுத்துள்ளனர். வடசென்னை பெண் தாதாவாக மகேஸ்வரி மிரட்டி உள்ளார். அவரது தம்பி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சங்கர் நாக் விஜயன் வில்லத்தனமாக கெத்து காட்டி நடித்துள்ளார். இவர்களோடு படத்தில் நடித்துள்ள மற்ற கேரக்டர்களும் தங்களின் உழைப்பை கொடுத்துள்ளனர்.
நடிகை ஹரிப்பிரியா மற்றும் கேபிரில்லாவுக்கும் பெரிதாக கதாபாதிரம் இல்லை
மேலும் வடசென்னை என்பதே மண்ணின் மைந்தர்களும் அங்கே பிழைக்க வந்து குடியேறியவர்களும் இணைந்து புழங்கும் சமூகங்களின் தொட்டிலாக இருப்பதை, யதார்த்தக் குற்ற நாடகமாகக் காட்சிப்படுத்த முயன்றிருக்கிறார் இயக்குநர் ஜெயவேல் முருகன்.
இசையமைப்பாளர் போபோ சசியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்தாலும், சில இடங்களில் கொஞ்சம் ஓவராக கொடுத்திருக்கிறது.
வடசென்னையை அழகாக காட்சிப்படுத்தி உள்ள ஸ்ரீராம் சந்தோஷ் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. மேலும் பட த்தின். மேலும் படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது பின்னணியில் ஒலிக்கும் சத்யராஜின் கம்பீரகுரல்.
பிளஸ்
கதை களம் , துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் மற்றும் வில்லன் நடிப்பு.
மைனஸ்
பின்னணி இசை , திரைக்கதை
மொத்தத்தில் “வருணன்” – நீருக்கு நடக்கும் வெறிதானமான ரத்த களம்.
RATING 2.5/5