Reviews

வீர தீர சூரன் – விமர்சனம் !

Published

on

Cast: Chiyaan Vikram, SJ Suryah, Suraj Venjaramoodu, Dushara Vijayan
Production: HR Pictures, Riya Shibu
Director: S.U.Arunkumar
Cinematography: Theni Eswar ISC
Editing: Prasanna GK
Music: G.V. Prakash Kumar
Language: Tamil
Runtime: 2H 42Mins
Release Date: 27 March 2025

மதுரையில் காவல் துறை அதிகாரியாக இருக்கும் எஸ்.ஜே. சூர்யா தனது பழைய பகையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என ரவி மற்றும் கண்ணன் ஆகிய இருவரையும் என்கவுண்டர் செய்ய வேண்டும் என திட்டமிடுகிறார். பெரிய ரவுடியாக இருக்கும் ரவி தனது மகன் கண்ணனை ( சூரஜ்) எப்படியாவது எஸ்.ஜே. சூர்யாவுடன் இருந்து காற்றுவதற்காக, விக்ரமின் துணையை நாடுகிறார். விக்ரமை வைத்து போலீஸ் எஸ்.ஜே. சூர்யாவை கொன்றுவிட்டால் தனது மகனை காப்பாற்றி விடலாம் என எண்ணி இந்த உதவியை விக்ரமிடம் கேட்க, அவரும் ஒத்துக்கொள்கிறார்.

இதன்பின் என்ன நடந்தது? ஏன் விக்ரம்( காளி) இதற்காக ஒத்துக்கொண்டார்? எஸ்.ஜே. சூர்யா ஏன் ரவி மற்றும் கண்ணனை கொள்ள வேண்டும் என நினைக்கிறார்? இவர்கள் அனைவருடைய பின்னணி என்ன? பல ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு இடையே நடந்த சம்பவம் என்ன? என்பதே படத்தின் மீதி கதை.

படம் எப்படி இருக்கு

பொதுவாக ஒரு திரைப்படத்தின் முதல் பாகம் தான் வழக்கமாக வெளியிடப்படும். ஆனால், வீர தீர சூரனில் இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிட்டுள்ளனர். இதற்கான பதில் படத்திலேயே இருப்பதாக இயக்குநர் அவரது நேர்காணல்களில் கூறியிருந்தார். இதனால் இத்திரைப்படம் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் இருந்தன.

இக்கதையின் நாயகனாக சீயான் விக்ரம், காளி என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பைக் கொடுத்து மிரள வைத்திருக்கிறார். காளி எப்போது எண்ட்ரீ ஆவார் என்ற ஆர்வத்தை ஒவ்வொரு காட்சியிலும் எகிற வைத்துக் கொண்டே கதை நகர்கிறது. இந்த கதைக்கு இவரே 100% பொருத்தமானவர் என்று கூறும் அளவிற்கான நடிப்பை கொடுத்திருந்தார் நடிகர் விக்ரம்.

நடிகை துஷாரா விஜயன் தனது யதார்த்தமான நடிப்பு மற்றும் வசனங்களை மிகவும் துல்லியமாக பேசி தனது கதாபாத்திரத்திற்கு உயிர் ஏற்றியிருக்கிறார். மேலும் விகரமுக்கு சரியான ஜோடியாக இருந்தார் நாயகி துஷாரா விஜயன்.

மேலும் எஸ்.ஜே. சூர்யா இப்படத்தில் வழக்கமான தனது பாணியில் அல்லாமல் சற்றே வித்தியாசமாக நடித்துள்ளார்.

நடிகர்கள் பிருத்வி ராஜ், சூரஜ், ரமேஷ் இந்திரா என சீனியர் நடிகர்கள் தங்களது கேரக்டர்களின் வலுவை புரிந்து கொண்டுதனது மிராட்டலான நடிப்பை வெளிபடுதியுள்ளார்கள்.

இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்குமாரின் பின்னணி இசையும் பாடல்களும் படத்தினை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்று விட்டது பெரிய பலம்.மேலும் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு ஒரு கிராமத்துக்குள் சென்று வந்துவிட்ட ஒரு உணர்வு கொடுத்து விட்டார்.

கதை மற்றும் திரைக்கதை பொறுதவரை மிகவும் அருமையான திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் அருண்குமார்.

பிளஸ்
விக்ரம்,எஸ் ஜே சூர்யா மற்றும் துஷாரா விஜயன் நடிப்பு, அருண்குமாரின் கதை மற்றும் திரைக்கதை, ஜி வி பிரகாஷ்குமாரின் பின்னணி இசை.
மைனஸ்

கதையின் முதல் பாதி மெதுவாக இருந்தது, மர்மமான சில கதாபதிரதின் முடிவுகள்

மொத்தத்தில் “வீர தீர சூரன்” – சூர ஹிட்.

 

Rating 3.25/5

 

Trending

Exit mobile version