படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு வீட்டில் இருவரை கொலை செய்து விட்டு அங்குள்ள 40 சவரன் நகையையும் 2 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்து செல்ல அங்கு வந்த போலீஸ் அதிகாரிகள் அந்த வீட்டில் வேலை பார்க்கும் காளி வெங்கட்டின் மகள்தான் இதனை செய்தார் என்று சொல்லி வழக்கை முடிக்கிறது. அதே சமயம் காணாமல் போன தன் மகளை கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார் காளி வெங்கட்.
இந்த பக்கம் படத்தின் இரண்டு ரவுடி கும்பல் ஒன்று ஜெய் பிரகாஷ் அவரின் மகன் ஹரிஷ் உத்தமன் எதிர் வில்லனாக சரத் லோஹிதஸ்வா அவரின் மூன்று தம்பிகள் இவர்கள் நால்வரையும் வெட்டி கொலை செய்தே தீர்வேன் என்று நிற்கும் ஜெய் பிரகாஷ் குழு காரணம் இவரின் மகளை அவர்கள் கொலை செய்ததே அதற்கு காரணம்.
வில்லன் சரத் லோஹிதஸ்வா மகளான படத்தின் நாயகியை காதலிக்கும் ஜெய் ஓடி போய் திருமணம் செய்ய செல்கிறார்கள் அனாதையான ஜெய் திருமணம் செய்ய போகும் நிமிடத்தில் இது எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்கிறார். அதே சமயம் நாயகியின் அப்பாவின் ரவுடி குழுவே ஊர் முழுவதும் இவர்களாஇ தேடுகிறது. நாயகியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று ஓடி போய் திருமணம் செய்ய எனக்கு இஷ்டம் இல்லை என்று கூறி நாயகியை அங்கேயே விட்டு விடுகிறார் ஜெய். ஜெய் பேசும் பேச்சில் மயங்கி அடுத்த வாரம் உங்கள் இருவருக்கும் திருமணம் என சொல்கிறார் நாயகியின் அப்பாவான சரத் லோஹிதஸ்வா.
உண்மையில் மகள் முன் அப்படி சொல்லி விட்டு அந்த குறிப்பிட்ட நாளில் ஜெய்யை போட்டுத்தல்ல முடிவு செய்கிறார் நாயகியின் அப்பா. திருமணம் நடக்கவிருக்கும் நிகழ்வை எதிரியான ஜெய் பிரகாஷ் குழுவிற்கும் தெரிவிக்கிறார் நாயகியின். திருமண நாள் வருகிறது ஜெய்யை கொலை செய்ய பின்புறமாக நெருங்கும் சரத் லோஹிதஸ்வாவை காளி வெங்கட்டும் ஜெய்யும் கொலை செய்கிறார்கள் ஜெய் சரத் லோஹிதஸ்வா குடும்பத்தை கொலை செய்ய என்ன காரணம் காளி வெங்கட் கொலை செய்ய என்ன காரணம் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
காதல், காமெடி என கதைக்களத்தில் நடித்து வந்த ஜெய் முதல் முறையாக ஒரு திரில்லர் ஆக்ஷன் படத்தில் நடித்துள்ளார். அவர் ஏற்றுக்கொண்ட அந்த கதாப்பாத்திரத்தை நிறைவாகவும் சிறப்பாகவும் செய்துள்ளார்.
குறிப்பாக காதலி இறந்தவுடன் இவர் கதறி அழும் காட்சி காதலை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்ற குழப்பத்தில் இருக்கும் காட்சியிலும் சரி ரசிக்கும் படியான நடிப்பு. சண்டைக்காட்சிகளிலும் நன்றாகவே நடித்துள்ளார்.
கதை பழையது என்றாலும் திரைக்கதை அமைத்த விதத்தில் சுசீந்திரன் நம்மை கவர்ந்து விடுகிறார்.
Cinetimee
பால சரவணன் சில இடங்களில் நம்மை சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார் ஆனால் நம்மால் சிரிக்க முடியவில்லை. இவரின் கதாப்பாத்திரம் படத்திற்கு வேண்டுமென்றே திணிக்கப்பட்டது போல உள்ளது.
ஜெய் பிரகாஷ், ஹரிஷ் உத்தமன் இருவருமே தங்கள் வீட்டு பெண்ணை கொலை செய்த கூட்டத்தை அழித்தே விடுவோம் என வெறிகொண்டு வரும் இவர்களின் நடிப்பு ரசிக்க வைக்கிறது.
நடிப்பைத்தாண்டி இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள ஜெய் அனைத்து ரசிகர்களையும் கவரும் விதமான துல்லள் இசையும் காதல் பாட்டும் மிக மிக சிறப்பாக கொடுத்துள்ளார். ஆனால் பின்னணி இசை அதிரடி ஆக்ஷன் படத்திற்கு ஏற்றது போல இல்லை பிஜிஎம் இசையமைத்ததில் கோட்டைவிட்டு விடுகிறார்.
படத்தில் மீனாட்சி, அகன்ஷா சிங் என இரு நாயகிகள் இருந்தாலும் அகன்ஷா சிங்கை விட மீனாட்சிக்கு காட்சிகள் அதிகம் என்றாலும் இருவருக்குமே சமமான முக்கியத்துவம் கொடுத்துள்ளார் சுசீந்திரன்.
பலி வாங்கும் ஒரு கதையை கையில் எடுத்துள்ள இயக்குநர் சுசீந்திரன். வலக்கமான பலமுறை பார்த்து பழகிய அதற கதை என்றாலும். திரைக்கதை அமைத்த விதமும் அதில் இவர் வைத்த டுவிஸ் படத்தில் ஆங்காங்கே சொல்லப்படும் குட்டி குட்டி கதைகள் அனைத்தும் இறுதியில் ஜெய் சொல்லும் கதையுடன் அவை எல்லாம் கோர்வையாக இணையும் விதம் பாராட்டிய வேண்டிய திரைக்கதை.
படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றால் வேல்ராஜ்ஜின் ஒளிப்பதிவு திண்னுக்கள் சுற்றுவட்டார கிராம அழகை மிகவும் அழகாக காட்டியுள்ளார்.