News

ரசிகர்கள் முன்னிலையில் வெளியாகும் வீட்ல விசேஷம் பாடல்கள் !

Published

on

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரனா நடித்து வெளியான திரைப்படம் Badhaai Ho வீட்டில் கல்யாண வயதில் இருக்கும் மகனை வைத்து கொண்டு அவரின் அம்மா கர்ப்பமாவதால் ஏற்படும் பிரச்சனைகளைதான் இந்த திரைப்படத்தின் கதை. ஹிந்தியில் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தற்போது இந்த திரைப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி தமிழில் ரீமேக் செய்துள்ளார். முக்கிய கதாப்பாத்திரங்களில் சத்யராஜ், ஊர்வசி ஆகியோர் நடித்துள்ளனர். வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். தமிழில் இப்படத்திற்கு வீட்ல விஷேசம் என்று பெயர் வைத்துள்ளனர்.

வருகிற ஜூன் 17-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் நாளை இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் உல்ல லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கு மக்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம் என்றும் இசை வெளியீட்டு விழாவிற்கு வரும் அனைவரும் படக்குழுவோடு புகைப்படங்கள் எடுக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version