News
தடுப்பூசி போட்டு வேண்டுகோள் விடுத்த இளம் நடிகை வெண்பா !
தமிழகம் மற்றும் இந்தியாவை கடந்த 2 மாதங்களாக நடுங்க வைத்து கொண்டிருக்கும் கொரோனா இரண்டாம் அலை. தற்போது படிபடிப்பாய குறைய ஆரம்பித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கவும் பாதுகாப்பாக இருக்கவும் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி இந்த வருடம் முதல் நடைபெற்று வருகிறது. அரசியல் சினிமா நட்சத்திரங்களும் சரி அரசியல் பிரமுகங்களும் சரி தடுப்பூசி போட்டு அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகை வெண்பா இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டார். இவர் காதல் கசகுதய்யா, பள்ளி பருவத்திலே, மாயநதி, ஆகிய படங்களில் நடித்தவர் ஆவார்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் இவர் கூறியதாவது:-
அனைவரும் வெகு விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் நம்மை சுற்றி இருக்கும் மக்களுக்கு அதுவே மிகுந்த பாதுகாப்பு. கட்டாயமாக முக கவசம் அணியுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.