Connect with us
 

News

வெந்து தணிந்தது காடு படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

Published

on

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் Vendhu Thanindhathu Kaadu.

இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முழுவதுமாக முடிவடைந்து தற்போது வெளியீட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் வெளியீட்டு தேதியை தற்போது படக்குழு அறிவித்துள்ளது. அதன் செப்டம்பர் 15-ம் தேதி இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது.

சிம்புவுடன் இப்படத்தில் ராதிகா, சித்தி இட்னானி, நீரஜ் மாதவ், ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.