News

வேட்டைக்காரன் பட வில்லன் சலீம் கெளஸ் மரணம் !

Published

on

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 80 முதல் 90-களில் வில்லனாக நடித்து வந்தவர் நடிகர் சலீம் கெளஸ்.கமல்ஹாசனின் வெற்றி விழா என்ற படத்தின் மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமானார். இப்படம் இவருக்கு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை கொடுத்தது.

அப்படத்தை தொடர்ந்து சின்னக்கவுண்டர், தர்மசீலன், திருடா திருடா, சீமான், ரெட், தாஸ், சாணக்யா, வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இறுதியாக ஆண்ட்ரியா நடிப்பில் வெளிவரவிருக்கும் கா என்ற படத்தில் நடித்திருந்தார்.

70 வயதாகும் சலீம் கெளஸ் சென்னையில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக உடல் நிலை குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.

Trending

Exit mobile version