Reviews

விடுதலை பாகம் -2 திரைவிமர்சனம் !

Published

on

Cast: Vijay sethupathi, Soori, Manju Warrier, Kishore, Anurag Kashyap, Ken Karunas, Rajeev Menon, Gautham Vasudev Menon,
Bose Venkat, Bhavani Sre, Vincent Ashokan, Chetan
Production: RS Infotainment
Director:Vetrimaaran
Cinematography
Editing: Ramar
Music: Ilaiyaraaja 
Language: Tamil
Runtime: 2H 46 Mins
Release Date: 20 December 2024

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரியை கதையின் ஹீரோவாக கொண்டு உருவான விடுதலை முதல் பாகத்திலேயே விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் தான் படத்தின் மையப்புள்ளி என்பதை உணர்த்தியிருந்தார். அவருடைய கைதுடன் முதல் பாகம் நிறைவடைய 2ம் பாகத்தில் பெருமாள் வாத்தியார் ஏன் வன்முறையை கையில் எடுக்கிறார். அந்த ரயில் விபத்துக்கான காரணம் என்ன? அவருடைய இளமைப் பருவம், காதல் குடும்பம், மீண்டும் அவர் தப்பிப்பது மற்றும் கடைசியில் அவருக்கு என்ன ஆகிறது என்பதை 2ம் பாகத்தில் செதுக்கியிருக்கிறார் வெற்றிமாறன்.

கதை களம்:

இக்கதையின் தொடக்கமே ஏன் விஜய் சேதுபதி வாதியாராக இருத்தவர் எப்படி காவல்துறை தேடும் குற்றவாளி ஆனார் என்பது தான் விடுதலை பாகம் 2 யின் இப்படம்’. இதை தொடர்ந்து கான்ஸ்டபிள் குமரேசன் (சூரி) பெருமாள் வாத்தியாரை (விஜய் சேதுபதி) பிடிக்க உதவிய நிலையில், போலீஸ் அதிகாரியான கெளதம் மேனன் பெருமாள் வாத்தியாரை விசாரிக்கும் இடத்தில் இருந்து படத்தை ஆரம்பிக்காமல் வாத்தியாராக இருந்த பெருமாள் கருப்பனுக்கு (கென் கருணாஸ்) நேரும் கொடுமை காரணமாக தனது பெயரையே கருப்பன் என மாற்றிக் கொண்டு பண்ணையார்த்தனத்துக்கு எதிராக புரட்சி செய்கிறார். தோழராக வரும் ஆடுகளம் கிஷோரின் அரசியல் சித்தாந்தங்களை கற்றுக் கொண்டு தோழராக மாறும் விஜய் சேதுபதி ஆடுகளம் கிஷோரின் கொலைக்குப் பிறகு மக்கள் படையை பயங்கரவாத இயக்கமாக மாற்றுகிறார். அவர் கைது பற்றி செய்தி வெளியான நிலையில், வெளியே நடக்கும் அரசியல் சூழ்ச்சிகள் மற்றும் போலீஸாரிடம் இருந்து தனது மக்கள் படை மூலம் தப்பிச் செல்லும் பெருமாள் வாத்தியாருக்கு கடைசியாக என்ன ஆகிறது. முதல் பாகத்தில் ஹீரோவாக மிரட்டிய குமரேசன் என்ன ஆனார் என்ன செய்தார் என்கிற கிளைமேக்ஸ் உடன் விடுதலை பாகம்2 கதை முடிகிறது.

மேலும் ஆரம்பத்தில் வரும் கருப்பன் (கென் கருணாஸ்) திரைக்கதை தான் படத்திற்கு பெரிய பலமாக அமைகிறது அருமையாகவும் வெறிதானமாகவும் இருந்தது.பெருமாள் வாத்தியாராக விஜய் சேதுபதி தனது நடிப்பால் மிரட்டுகிறார். பண்ணையார்கள் தங்கள் வயலில் கூலி வேலை செய்யும் பெண்களை படுக்கைக்கு கொண்டு சென்று கெடுப்பதை எதிர்த்து பண்ணையார் ஒருவரை கென் கருணாஸ் வெட்டும் காட்சிகளிலேயே படத்தின் ஃபயர் பற்றிக் கொள்கிறது. ஆனால், கென் கருணாஸ் கொல்லப்படும் இடத்தில், அவரை காப்பாற்ற போராடும் பெருமாள் வாத்தியாரையும் பண்ணையாரான போஸ் வெங்கட் குத்திவிடுகிறார். அதில் இருந்து அவரை தோழராக வரும் ஆடுகளம் கிஷோர் காப்பாற்றுகிறார்.

இளையராஜாவின் பின்னணி இசையும் பாடலும் கதைக்கு சிறப்பாக அமைந்த்து மேலும் கதையின் 2 ஆம் பாதியின் ஆரம்பமே மனசுல பாடல் இடம்பெற்றது கதைக்கு மிக பொருத்தமாக இறுந்தது

மேலும் மஞ்சு வாரியாரின் சிறப்பான மற்றும் துணிச்சலான நடிப்பு பார்க்கும் நம்மை வியக்கவைத்து.

மொத்தில் விடுதலை பாகம் 2 – மக்களின் எழுச்சியின் வெற்றிமாரனின் வெற்றி.

 

Rating : 3.5/5

 

Trending

Exit mobile version