News
விஜய் 67-வது உறுதி செய்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் !
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசன் நடித்து ஜூன் 3-ம் தேதி வெளியாகவுள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை அடுத்து தளபதி விஜய்யை வைத்து இயக்கபோவதாக தகவல் பரவி வந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் விஜய்யின் 67-வது திரைப்படம் மாஸாகவும், கிளாஸாகவும் இருக்கும் என்று கூறி அடுத்த படத்த இயக்கவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இப்படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த லலித் குமார் தயாரிக்கவுள்ளாராம். இப்படத்திற்கும் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.