News
விருமன் முதல் நாள் காட்சியை பார்த்த தளபதி விஜய் குடும்பம் !
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் ‘விருமன்’ இந்த ஆண்டு மட்டும் கார்த்தின் மூன்று படங்கள் வெளிவரவிருக்கிறது. ஒரு வருடத்தில் மூன்று படங்கள் வெளியாவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். வெளியான முதல் நேர்மறையான வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது என்றாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கிராமத்து கதையம்சம் என்ற காரணத்தால் கிராமத்து ரசிகர்களை வெகுவாக இப்படம் கவர்ந்துள்ளது. கார்த்தி நடித்த படங்களில் முதல் நாள் வசூலில் அதிக வசூலை பெற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா Vijay திரையரங்குகளில் சென்று பார்த்ததாக கூறப்படுகிறது. சென்னையிலுள்ள ரோகினி திரையரங்கில் சங்கீத விருமன் படத்தை பார்த்ததாக கூறப்படுகிறது.
ரோகினி திரையரங்கிலுந்து சங்கீதா Vijay வெளிவரும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குநர் ஷங்கர் மற்றும் Vijay -க்கும் நல்ல ஒரு நட்பு உறவு இருப்பதால் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் அதிதி ஷங்கருக்கு ஆதரவளிக்கும் விதமாக முதல் நாள் காட்சியை சென்று பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.
சூர்யா தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.