News

தளபதி 66 படத்தின் கதாநாயகி யார் குழப்பத்தில் விஜய் ரசிகர்கள் !

Published

on

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 66 படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கவுள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ இப்படத்தை தயாரிக்க இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

இந்த நிலையில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் ஒரு பாடல் காட்சியுடன் ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும் தளபதி 66 படத்தின் நாயகி யார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் உள்ளது. பலர் ராஷ்மிகா மந்தன்னா என்று கூறி வரும் வருகிறார் இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.

இந்த நிலையில் தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version