News

விஜய் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் செய்யும் விஜய் ரசிகர்கள் !

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இன்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதற்கு ரசிகர்கள் மட்டுமல்ல பல திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை நீலாங்கரையியுள்ள அமைந்துள்ள விஜய் வீட்டுக்கு வந்த ரசிகர்கள் சிலர் விஜய் அண்ணா வெளியில் வாருங்கள் என கோஷம் எழுப்பினர்.

விஜய்க்கு அனைத்து தரப்பிலும் ரசிகர்கள் உள்ளனர். அதுவும் பெண் ரசிகர்கள் இவருக்கு அதிகமுள்ளனர். அவர்களும் இன்று பல பரிசுப் பொருட்களுடன் விஜய் வீட்டின் முன்பு காத்திருக்கின்றனர்.

மேலும் சிலர் சாலையில் வரும் குடியிருப்புவாசிகளின் சொகுசு கார்களை மறித்து காருக்குள் விஜய் இருக்கிறாரா என்றும் பார்த்து வருகின்றனர். மேலும் விஜய் வெளியில் வந்து பார்க்க வேண்டும் தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Trending

Exit mobile version