News
ராயப்பனின் இளமை பருவம் படமாகிறது !
தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் சென்னையில் நடந்த விழாவொன்றில் விஜய் படத்தை இயக்குவதை லோகேஷ் கனகராஜும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த படத்தை முடித்த பின்னர் அட்லி இயக்கத்தில் தனது 68-வது படத்தை நடிக்கவுள்ளார்.
அட்லி இயக்கத்தில் வந்த பிகில் படத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்து இருந்தார். அதில் ராயப்பன் என்ற தந்தை கதாபாத்திரம் சிறிது நேரம் வந்தாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ராயப்பனின் இளம் வயது சம்பவங்களை திரைக்கதையாக அமைத்து 68-வது படம் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.