News

பிரபல பட்டியலில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த விஜய்யின் மாஸ்டர் !

Published

on

பிரபல திரைப்படங்களுக்கு பதிப்பெண் வழங்கும் ஐ.எம்.டி.பி-யின் 2021-ம் ஆண்டின் பிரபல இந்தியப் படங்களின் வரிசையில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான மாஸ்டர் திரைபப்டம். இதில் வில்லனாக விஜய் சேதுபதி விஜய்க்கு ஜோடியாக மாளாவிகா மோகனன் நடித்திருந்தார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரித்த இப்படத்துக்கு அனிருத் இசையமைதிருந்தார்.

இதன் படபிடிப்பு முடிந்து வெளியாகும் சமயத்தில், கொரோனா பரவல் அதிகமானதால், இதன் வெளியீடு தள்ளிப் போனது. அதோடு திரையரங்குகளும் மூடப்பட்டது. இதையடுத்து நவம்பர் 10-ம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட கடந்த வருடம் தமிழக அரசு அனுமதியளித்தது.

கொரோனா லாக்டவுனுக்கு பின்னர் முன்னணி நடிகர் படம் என்ற பெருமையும் பொங்களுக்கு வெளியான மாஸ்டர் படம் பெற்றது. 50 சதவீத இருக்கையுடந்தான் படம் வெளியாகனும் என்று அரசு கூறிய காரணத்தால் படத்தின் காட்சிகளின் எண்ணிக்கை அதிகமானது. தமிழகம் மட்டுமில்லாமல் அண்டை மாநிலங்கள் மற்றும் இந்திய அளாவில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது மாஸ்டர் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.

இந்நிலையில் பிரபல திரைப்பட தரவுகள் இணையதளமான ஐ.எம்.டி.பி-யின் 2021-ம் ஆண்டு பிரபல இந்தியப் படங்களின் வரிசையில்
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்கள் முறையே,
2. ஆஸ்பிரன்ட்ஸ் (வெப் சீரிஸ்)
3. தி வைட் டைகர்
4. திரிஷ்யம் 2
5. நவம்பர் ஸ்டோரி
6. கர்ணன்
7. வக்கீல் ஸாப்
8. மஹாராணி (வெப் சீரிஸ்)
9. கிராக்
10. தி கிரேட் இண்டியன் கிச்சன் ஆகியவைகள் பெற்றிருக்கின்றன.

இதனை இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

Trending

Exit mobile version