Connect with us
 

News

மழையால் பாதித்தவர்களுக்கு உணவளிக்கும் விஜய்யின் மக்கள் இயக்கம் !

Published

on

தளபதி விஜய்யின் விலை இல்லா உணவு திட்டம் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது தற்பொழுது சென்னையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ள நிலையில் மக்கள் வெளியே செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 நேரம் முழு உணவும் இலவசமாக வழங்கி வருகின்றார்கள் இதனடிப்படையில் கும்மிடிப்பூண்டி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உணவும் உடுக்க உடையும் வழங்கி வருகிறார்கள்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இவ்வாறு ஏழை எளிய மக்களுக்கு மூன்று நேரம் உணவு வழங்கியதால் மக்களிடம் மிகுந்த பாராட்டு பெற்று வருகிறார்கள்.இதற்கு முன்னதாக கொரோனா காலங்களில் உண்ண உணவு இல்லாத சாலையோர மக்களுக்கு மூன்று நேரமும் அவர்கள் இலவசமாக உண்ணும் வகையில் தஞ்சாவூரில் விஜய் மக்கள் இயக்கம் உணவகம் ஒன்று ஆரம்பித்து அனைத்து மக்களுக்கும் இலவசமாக உணவு வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.