Connect with us
 

News

இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட தந்தையை சந்தித்து நலம் விசாரித்த விஜய் !

Published

on

அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய விஜய் தன் தந்தை தாயை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார். தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

லியோ படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தன் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார் தளபதி விஜய். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கயுள்ளார்.

தளபதி 68 படத்தின் போட்டோ ஷூட் காட்சிகளை எடுப்பதற்காக கடந்த மாதம் அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தார் விஜய்.

சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார் விஜய். இதய பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை கொண்ட தன் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்கள் இருவருக்கும் சிறு பிரச்சனை இருந்ததாகவும் தற்போது இருவரும் இணைந்து விட்டனர் என்றும் கூறப்படுகிறது.