Connect with us
 

News

காதலியை கரம் பிடிக்கும் விஜய் பட வில்லன் வித்யூத் ஜம்வால் !

Published

on

தமிழில் விஜய் நடித்த துப்பாக்கி, அஜித்குமாரின் பில்லா 2 படங்களில் வில்லனாக நடித்து பிலபலமானவர் வித்யூத் ஜம்வால். சூர்யா நடித்த அஞ்சான் படத்திலும் இவர் நடித்துள்ளார்.

தமிழ் மொழியில் மட்டுமல்ல தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார், இவருக்கு ஆடை வடிவமைப்பாளார் நந்திதாவுக்கு காதல் மலர்ந்துள்ளதாக ஏற்கனவே கிசு கிசுக்கள் பரவி வந்தது. தற்போது இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காதலியுடன் வித்யூத் ஜம்பால் தாஜ்மகாலுக்கு சென்றுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் நந்திதா கை விரவில் நிச்சயதார்த்த மோதிரம் அணிந்திருக்கிறார். நந்திதா ஏற்கனவே டெல்லியை சேர்ந்த தொழில் அதிபரை திருமணம் செய்து பின்னர் அவரை பிரிந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading