News

விக்ரம் படத்தில் இணைந்த விஜய் பட வில்லன் நடிகர் !

Published

on

மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹானை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகர். அவரின் கைதி படம் விருமாண்டியின் தொடர்ச்சி என்று கூறினார். அதே போல மாஸ்டர் படத்தில் நம்மவர் படத்தை நினைவு படுத்தும் பல காட்சிகளை வைத்திருந்தார்.

விக்ரம் படத்தின் போட்டோசூட் பணிகள் எல்லாம் முடிந்து படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது ரசிகர்களிடையே.

கமஹாசன் அரசியலில் ஈடுபட்ட காரணத்தல் படப்பிடிப்பை நடத்த முடியாமல் போனது. தேர்தலில் கமல் தோல்வி அடைந்ததை அடுத்து படங்களில் நடிக்க ஆர்வமாகவுள்ளாராம் கமல்ஹாசன்.

இப்படத்தில் முதலில் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். கால்சீட் பிரச்சனை காரணமாக நடிக்கமுடியாமல் போக அந்த கதாப்பாத்திரத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் ஒப்பந்தமானார்.

இந்நிலையில் தற்போது கைதி, மாஸ்டர் படத்தில் வில்லனாக மிரட்டிய அர்ஜூன் தாஸ் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

அதே போல விஜய்சேதுபதியும் ஒரு சிறு வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் முதலில் வில்லனாக நடிக்க பிரபுதேவா அவர்களிடம்தான் கேட்க பட்டதாம். ஆனால் விஜய்சேதுபதி உள்ளே வந்த காரணத்தால் பிரபுதேவா அதிலிருந்து நீக்கப்பட்டாராம். அதை பிரபு தேவாவிடம் முறையாக கூட கூறவில்லையாம் படக்குழு என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version