News
அரபிக் எல்லாம் பயங்கரமா எழுதிறியே சிவகார்த்திகேயனை பாராட்டிய விஜய் !

தளபதியின் ‘பீஸ்ட்’ படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய ‘அரபிக் குத்து’ பாடல்தான் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளது. மிக குறுகிய காலத்தில் யூடியுபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. தற்போது வரை இப்பாடல் 140 மில்லியன்ஸ் பார்வையாளர்களை கடந்து விட்டது.
இந்த நிலையில் விருது வழங்கும் விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவரிடம் அரபிக் குத்து பாடல் குறித்து தளபதி விஜய் என்ன சொன்னார் என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் ‘அரபிக் குத்து’ பாடலை முன்பே படமாக்கிவிட்டார்கள். பாடல் குறித்து விஜய் சாரின் கருத்தை என்னால் அறியமுடியவில்லை. சமீபத்தில் ப்ரமோ வீடியோவை படமாக்கினோம். அப்போதுதான் விஜய் சார் தொலைபேசியில் சூப்பர் பா எழுதிக்கொடுத்ததற்கு நன்றி பா. அரபிக் எல்லாம் பயங்கரமா எழுதுறியே என்றார்.
‘அரபிக் குத்து’ பாடல் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. முதல் முறையாக கேட்டதும் இது பெரிய ஹிட் ஆகும் என்று இசையமைப்பாளர் அனிருத்திடம் தளபதி விஜய் சார் கூறியிருக்கிறார் என்று கூறினார்.