News

ஓடிடி தளத்தில் வெளியாகும் விஜய் சேதுபயின் கடைசி விவசாயி !

Published

on

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்கா முட்டை படத்தையும் குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் மணிகண்டன். இவர் தற்போது இயக்கி வெளியீட்டுக்கு தயாராகியுள்ள திரைப்படம் கடைசி சிவசாயி. இப்படத்தை இயக்குனர் மணிகண்டன் அவர்களே தயாரித்துள்ளார். இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து சுமார் 2 வருட காலமாக திரைப்படம் கிடயாய் கிடக்கிறது.

இப்படத்தில் விஜய்சேதுபதி, யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். நல்லாண்டி என்கிற ஒரு முதியவர் ஒருவர்தான் இப்படத்தின் கதையின் நாயகன் அவரை சுற்றித்தான் கதை நகரும். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சர்வதேச விருதுக்கு அனுப்பி விட்டு அதன் பின்னர் திரையரங்கில் வெளியிட திட்டமிட்டிருந்தனர் படக்குழு.

தற்போது உள்ள சூழலில் திரையரங்கில் படத்தை வெளியிட முடியாது. இதன் காரணமாக படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளார். பல ஓடிடி தளங்கள் இப்படத்தை வாங்க போட்டி போட்டு மோதியதில் இப்படத்தை அமேசான் ஓடிடி தளம் இப்படத்தை நல்ல விலை கொடுத்து வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகார்வபூர்வ அறிவிப்பு வெளியாகும்.

Trending

Exit mobile version