Connect with us
 

News

மீண்டும் வில்லனாக பல படங்களில் விஜய்சேதுபதி !

Published

on

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி என்ன வேடம் கொடுத்தாலும் தன் மனதிற்கு பிடித்திருந்தால் நடிக்கும் ஒரு நடிகர். இவர் ஒரு முன்னணி நடிகர் என்றாலும் வேறு சில முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். அந்த வகையில் மாதவனின் விக்ரம் வேதா ரஜினிகாந்த் நடித்த பேட்ட தளபதி விஜய் நடித்த மாஸ்டர் இப்படத்தில் விஜய்சேதுபதியின் நடிப்பு ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது.

தற்போது கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதனால் இப்படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதா நாயகனாக இருக்கும் பாலகிருஷ்ணா நடிக்கும் ஒரு தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதிக்கு வாய்ப்பு வந்துள்ளதாம்.

இது குறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் நடிக்க சம்மதம் தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே உப்பென்னா என்ற தெலுங்கு படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்திருக்கிறார்.அப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

தற்போது விஜய்சேதுபதி கைவசம் 12 படங்கள் உள்ளதாம். திரையரங்குகள் திறந்ததும் இவை அனைத்துமே அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.