News
அரண்மனை நான்காம் பாகத்திலிருந்து விஜய்சேதுபதி விலகல் !

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகவுள்ள அரண்மனை 4 பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது அதிலிருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் அரண்மனை. அப்படம் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பும் வெற்றியும் இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் எடுக்க வைத்தது. அதன் வரிசையில் அரண்மனை இதுவரை 3 பாகங்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் நான்காம் பாகத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது என தகவல் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. இதில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார் என அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் அரண்மனை 4-ம் பாகத்திலிருந்து விஜய்சேதுபதி விலகியுள்ளதாகவும் சுந்தர்சியே கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்திலிருந்து விஜய்சேதுபதி விலக முக்கியகாரணமாக சம்பள பிரச்சனை என்று கூறப்படுகிறது. தற்போது விஜய்சேதுபதிக்கு மார்க்கெட் குறைந்துள்ளதால் சம்பளத்தை குறைத்து பேசியுள்ளார்களாம் ஆனால் சொன்ன சம்பளத்திலிருந்து குறைக்காமல் கறாராக இருந்ததால் அந்த பிரச்சனையில்தான் விஜய்சேதுபதி வெளியேறியதாக சொல்லப்படுகிறது.