News

எனக்கு மகளாக நடித்த நடிகையுடன் ஜோடி சேர மாட்டேன் – விஜய்சேதுபதி !

Published

on

தமிழ் மொழியில் அல்ல அனைத்து மொழிகளிலும் பிஸியான நடிகராக வலம் வருபர் நடிகர் விஜய்சேதுபதி. கதாநாயகன் என்று இல்லாமல் வில்லன் வேடங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான உப்பெண்ணா என்ற படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றுக்கொடுத்தது இவருக்கு.

அந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு மகளாக கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். தற்போது விஜய்சேதுபதி நடிக்கும் ஒரு புதிய படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடந்தது.

ஆனால் விஜய்சேதுபதி வேண்டாம் என்று கூறிவிட்டாராம். காரணம் எனக்கு மகளாக நடித்தவருடன் ஜோடி சேரமாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டாராம் விஜய்சேதுபதி.

Trending

Exit mobile version