Reviews

விஜய் ஆனந்த் – விமர்சனம் !

Published

on

Movie Details

கர்நாடகவில் ஒரு லாரியுடன் தன் தொழிலை ஆரம்பித்து இன்று இந்தியா முழுவதும் 5000-க்கும் மேற்பட்ட லாரிகள் 200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் என மிகப்பெரிய லாஜிஸ்டிக்ஸ் கம்பெனியை உருவாக்கிய விஜய் சங்கேஷ்வர் பற்றிய பயோபிக்தான் இந்த திரைப்படம்.

1960 – களில் காலகட்டத்தில் படத்தின் கதை ஆரம்பாகிறது. கர்நாடகாவின் சிறிய ஊரான கதக் என்ற ஊரில் அப்பாவின் பிரிண்டிங் பிரஸ் வேலைக்கு உதவியாக இருந்து வரும் விஜய் சங்கேஷ்வர். இன்னும் அதிகமாக பிரிண்டிங் செய்ய செமி ஆட்டோமெடிக் மெஷினை வாங்கி தொழிலை மேம்படுத்திகிறார். இதன் அடுத்த கட்டமாக லாரி ஒன்றை வாங்கி டிரான்ஸ்போட் வியாபாரத்தில் இறங்க முடிவெடுக்கிறார்.

ஆனால் மார்க்கெட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் அவருக்கு பிரச்சனை கொடுக்கிறார்கள். அதை எதிர்த்து போராடி மார்க்கெட்டில் உள்ள பெரிய மனிதர் ஒருவரின் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக தனது டிரான்ஸ்போர்ட்டை உயர்த்துகிறார்.

இவரை பற்றியும் இவரின் நிறுவனத்தையும் பற்றி தவறான செய்திகள் வர அதை சமாளிக்க சொந்தமாகவே ஒரு நாளிதழை ஆரம்பிக்கிறார். அதிலும் போட்டி நிறுவனத்தால் ஒரு சிக்கல் வர அந்தப் பத்திரிக்கை நிறுவனத்தை விற்றுவிட்டு பின்னர் 5 வருடங்கள் கழித்து வேர் ஒரு பெயரில் மீண்டும் புது பத்திரிக்கை ஒன்றை ஆரம்பிக்கிறார். அப்படி இவர் ஆரம்பிக்கும் அந்த வியாபாரப் பயணம்தான் இந்த விஜயானந்த்.

படம் 60-களின் ஆரம்பித்து 70, 80,90 என படிப்படியாக அடுத்த காலத்துக்கு நகர்கிறது. அந்த அந்த காலத்துக்கு ஏற்ற தோற்றங்களை திரையில் மிக அழகாக காட்டியுள்ளது படக்குழு. பல இடங்களின் அந்த காலத்தை காட்டுவதற்கு பல விதத்தில் பல அரங்குகளை உருவாக்கியுள்ளனர்.

விஜய் சங்கேஷ்வர் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ள நிஹால் மிக பொருத்தமான தேர்வு எந்த ஒரு இடத்திலும் இவரின் நடிப்பு நமக்கு சோர்வை கொடுக்கவே இல்லை. அந்த அளவுக்கு அந்த கதாப்பாத்திரத்துடன் ஒன்று நடித்துள்ளார்.

விஜய் சங்கேஷ்வர் மகன் ஆனந்த் சன்கேஷ்வர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாரத் போபனா, விஜய் சங்கேஷ்வர் மனைவியாக லலிதாவாக சிரி பிரஹலாத், அம்மாவாக வரும் வினய பிரசாத் கதாப்பாத்திரத்தை உணர்ந்து மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். இவர்களை எல்லாம் விட அப்பாவாக வரும் ஆனந்த் நாக் தன் அனுபவ நடிப்பால் கிளாப்ஸ் வாங்குகிறார். குறிப்பாக தன் ஆலோசனையை கேட்காமல் வீட்டை விட்டு செல்லும் விஜய் மீது கடும் கோபத்தில் இருக்கும் போது ஒரு முறை விஜய் அலுவலகத்திற்கு சென்று மகனின் வளர்ச்சியை பார்த்து ஆனந்தம் அடையும் காட்சிகளில் எல்லாம் அற்புதம்.

கோபி சுந்தர் இசை பின்னணி இசை, கீர்த்தன் புஜாரி ஒளிப்பதிவு, ஹேமந்த்குமார் படத்தொகுப்பு, ஆடை வடிவமைப்பு என அனைத்தும் படத்திற்கு பெரும் பலம்.

கண்டிப்பாக புதிய தொழில் ஆரம்பிக்கும் அனைவரும் இப்படம் பார்த்த பின்னர் ஒரு நம்பிக்கை அவர்களுக்குள் வரும் அப்படி ஒரு தாக்கத்தையும் தன் நம்பிக்கையும் கொடுக்கும் திரைப்படம்.
VijayAnand Review By CineTime

[wp-review id=”44786″]

Trending

Exit mobile version