News

சுந்ததிர தினத்தில் திரைக்கு வரும் விஜய் நடிக்கும் தி கோட் !

Published

on

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

விஜய்யுடன் இப்படத்தில் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் என பல முக்கியமான நட்சத்திரம் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடை பெற்று வருகிறது. முழுமையாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய ஒரு மாத காலம் மட்டுமே உள்ள நிலையில் படத்தை ஜூன் மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுருந்தது.

இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவலின்படி இப்படத்தை ஆகஸ்ட் மாதம் அதாவது சுந்ததிர தினத்தன்று வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

 

Trending

Exit mobile version