News
உளவுத்துறை அதிகாரியாக பீஸ்ட் படத்தில் நடிக்கும் விஜய்?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். ஏப்ரல் 13 -ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. அதன் படி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் அதே பெயரில் இப்படம் வெளியாகிறது. ஆனால் ஹிந்தியில் மட்டும் ரா என்ற பெயரில் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ரா என்பது இந்தியாவின் ரகசிய உளவுத்துறை அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பெயர் மூலம் பீஸ்ட் படத்தில் உளவுத்துறை அதிகாரியாக விஜய் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.