News
விஜய் – வெற்றிமாறன் கூட்டணி உறுதி !

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்து நாளை மறுநாள் திரைக்கு வரவுள்ள திரைப்படம் விடுதலை இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இப்படம் இந்த வருடமே இரண்டாம் பாகமும் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் வெற்றி மாறன் உதவியாளவும் டாணக்காரன் படத்தின் இயக்குநருமான புகழ் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் – வெற்றிமாறன் கூட்டனி பற்றி பேசியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் விஜய் அற்றும் கமல்ஹாசன் படத்தை இயக்க வெற்றிமாறனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது என கேட்டார். அதற்கு பதில் கூறிய புகழ் விஜய் – வெற்றிமாறன் கூட்டணி உறுதிதான். விஜய்க்கு ஒன்லைன் ஸ்டோரி சொல்லி அவரும் சம்மதம் சொல்லிட்டாங்க. ஆனால் கமல் சார் கூட என்ன நிலவரம் என்று தெரியவில்லை என பதிலளித்தார்.