News
பிரேமம் படம் பார்த்து விட்டு என்னை பாராட்டிய முதல் தமிழ் ஹீரோ விஜய் !

பிரேமம் திரைப்பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனிடம் ரசிகர் ஒருவர் விஜய் பற்றி ஒரு கேள்வி கேட்டுள்ளார் .
அதாவது பீஸ்ட் திரைபப்டல பாடலை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த அல்போன்ஸ் புத்திரனிடம் ரசிகர் ஒருவர் காதல் கதையம்சத்தைக் கொண்ட திரைப்படத்தை தளபதியை வைத்து நீங்கள் இயக்கினால் கட்டாயம் வெற்றி பெறும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த அல்போன்ஸ் புத்திரன் ‘பிரேமம்’ திரைப்படம் வெளியானதற்கு பின்னர் தன்னுடைய உதவியாளர் மூலமாக தமிழகத்திலிருந்து அழைத்துப் பேசிய முதல் நபர் விஜய்ய்தான். ஒரு முறை விஜய் அவர்களை நேரில் சந்தித்து பேசினேன் விரைவில் புதிய திரைப்படத்தை இயக்க அவர் என்னை அழைப்பார் என்று நம்புகிறேன் அதற்காக நான் கத்திருக்கிறேன் எனவும் பதில் கூறியுள்ளார்.