Connect with us
 

News

தெரு ஓரத்தில் அனாதை பிணமாக கிடந்த விஜயகாந்த் பட இயக்குநர் !

Published

on

தமிழ் திரையுலகில் வெற்றி பெற்ற ப்ல பிரபலங்கள் பின்நாட்களில் வாய்ப்பு கிடைக்காமல் அநாதையான சூழ்நிலைக்கு தள்ளப்படுவது புதிதல்ல.அதே போல் இன்றும் பல இயக்குனர்களும் நடிகர்களும் வாய்ப்புக்காக ஸ்டூடியோக்களின் வாசலில் தவம் இருக்கின்றனர், இதில் பலர் உணவிற்கு கூட வழியின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அதே போல் ஒரு சம்பவம் இன்று காலை சென்னையை பரபரப்பாக்கியுள்ளது.90 களில் பிரபல இயக்குனராக இருந்தவர் M.தியாகராஜன் . இவர் பிரபுவின்வெற்றி மேல் வெற்றி, விஜயகாந்த்தின் மாநகர காவல் ஆகிய படங்களை இயக்கியவர்..

DFT படித்த மாணவரான தியாகராஜன் ஆரம்பத்தில் அவரது சொந்த ஊர் அருகே விபத்தில் அடிபட்டு கோமாவிலிருந்து பிழைத்து மீண்டும் கோடம்பாக்கத்தை நம்பி வந்து சுற்றியவர்.90 களுக்கு பிறகு இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

பின்னர் ஊருக்கு திரும்ப மனமின்றி சென்னை வடபழனியில் அழுக்கான உடையோடு கையில் செய்திதாளோடும் அம்மா உணவத்தின் ஆதரவிலும் வாழ்ந்து வந்தார் தியாகராஜன். ஏ.வி.எம் க்கு வெற்றி படங்களை தந்த இயக்குனர் தியாகராஜன் அந்த ஸ்டுடியோவையே பல வருடங்களாக சுற்றிசுற்றி வருகிறார்.

இந்நிலையில் இன்று அதிகாலை ஏ.வி.எம் ஸ்டுடியோவுக்கு எதிரில் உள்ள பிளாட் பாரத்தில் அனாதை பிணமாக கிடந்துள்ளார் தியாகராஜன்.தகவல் அறிந்து வந்த சென்னை மாநகர காவல்துறையினர் இயக்குனரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.சினிமாவில் வெற்றி மேல் வெற்றி பெற முடியாமல் ஏவிஎம் முன்பாகவே உயிரிழந்து மாநகர காவல் துணையோடு தியாகராஜனின் இறுதி நாள் இப்படியாக வாழ்க்கை முடிந்துள்ளது பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.