Connect with us
 

News

விக்ரம் மூன்றாம் பாகத்தின் ஹீரோ சூர்யா – கமல் ஹாசன் !

Published

on

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து ஜூன் 3ம் தேதி வெளியாகயிருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’ இப்படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது கேன்ஸ் திரைப்படவிழா நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்ட கமல்ஹாசன் அந்த நாட்டு ஊடகம் ஒன்றிக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் கூறியுள்ள கமல்ஹாசன் ‘விக்ரம்’ படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் வெளியாகும் என்றும் அதில் முக்கியமான கதாப்பாத்திரமாக சூர்யாதான் நடிப்பார் என்றுன் கூறியுள்ளார்.

விக்ரம் படத்தில் இறுதி 5 நிமிடம் மட்டுமே சூர்யா வருவார். அவரின் அந்த சிறப்பு தோற்றத்தைக்கொண்டுத்தான் விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்கவுள்ளோம்.கண்டிப்பாக விக்ரம் படத்தின் மூன்றாவது பாகத்தில் சூர்யாதான் கதா நாயகனாக இருப்பார் என்று கமல்ஹாசன் உறுதியாக கூறியுள்ளார்.