News

இரண்டு பாகமாக வெளியாகும் விக்ரமின் துருவ நட்சத்திரம் !

Published

on

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கினார்.விக்ரமுடன் பார்தீபன், ரித்துவர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட பலர் நடித்தனர். இதன் பட வேளைகளை 20217-ம் ஆண்டிலெயே தொடங்கினர்.

வெளிநாடுகளில் படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 20218-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு சில பிரச்சனைகளால் படம் தள்ளி போனது. 2020-ல் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர் ஆனால் அப்போதும் வெளியாகவில்லை.

கடந்த ஜூன் மாதம் வெளியாகவிருந்த நிலையில் மீண்டும் வெளியீடு தள்ளிப்போனது. படத்தில் சில காட்சிகளை படமாக்க வேண்டியுள்ளத என்றும் சில பிரச்சினைகளால் படப்பிடிப்பை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது.

தற்போது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு படத்தை திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.படத்தின் காட்சிகள் மொத்தமாக 4 மணி நேரம் 30 நிமிடங்கள் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே துருவ நட்சத்திரம் படத்தை பாகுபலி போன்று 2 பாகங்களாக வெளியிட படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விக்ரம் கைவசம் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் படங்கள் உள்ளன.

Trending

Exit mobile version