Connect with us
 

News

விக்ரம் படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம் !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. படத்தின் புரமோஷன் பணிகள் மற்றும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது இப்படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை விஜய் டீவி பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் இந்தி உரிமையை விஜய் டீவி பெற்றுள்ளது.

மலையாள உரிமத்தை மட்டும் ஆசியா நெட் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘விக்ரம்’ படத்தின் டிஜிட்டல் உரிமத்தை ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.