காவல்துறை அதிகாரிகளாக இருக்கும் காளிதாஸ், கமல்ஹாசன் இருவரையும் முகமூடி அணிந்த ஒரு கும்பல் கொடூரமாக கொலை செய்கிறது. இந்த தொடர் கொலையை கண்டுபிடிக்க வருகிறார் பகர் பாசிலை நியமிக்கிறார் அதிகாரி சென்பன் வினோத் ஜோஸ்.
அந்தை கொலைகளுக்குப் பின்னணியில் 2 லட்சம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் தயாரிக்கும் மூலப் பொருள் இருக்கிறது என்பதையும் அதன் பின்னணியில் இருப்பது விஜய் சேதுபதி என்பதையும் கண்டு பிடிக்கிறார் பகத் பாசில். இது ஒரு புறம் இருக்க அடுத்த கொலை செய்ய போகும் நபரை சொல்லி அனுப்புகிறது அந்த முகமூடி கும்பம் இதை தடுக்க வேண்டும் என்று களத்தில் இறங்குகிறார் பகத் பாசில் அப்படி முகமூடி அணிந்து கொலை செய்யும் அந்த நபரை நெருங்கும் போது பகத் பாசிலுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருக்கிறது அது யார்? அடுத்தது என்ன நடந்தது என்பதுதான் படத்தின் பரபரப்பான அதிரடி மீதிக்கதை.
60 வயதை கடந்து விட்டாலும் அந்த வயதுக்கு ஏற்ற கதாப்பாத்திரத்தை சரியாக தேர்வு செய்து செய்தாலும் அந்த கதாப்பாத்திரதுக்கு இவர் கொடுத்துள்ள எனர்ஜிதான் படத்தின் ப்ளஸ். இவரின் அறிமுக காட்சியில் பத்தல பத்தல பாடலுக்கு நடனம் அடுத்த காட்சியில் சண்டைக்காட்சி என முழு எனர்ஜியுடன் நடித்துள்ளார். குறிப்பாக படத்தில் ஏகப்பட்ட பல முன்னணி நடிகர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கும் இடம் கொடுத்து தன் இடத்தையும் தன் ஸ்டைலில் நடித்து அசத்தியுள்ளார்.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து இப்படத்தில் கொடூரமான வில்லனாக விஜய் சேதுபதி. மாஸ்டர் படத்தில் வரும் பவானி நடிப்பின் மனம் லைட்டாக வீசுகிறது இருந்தாலும் உடல் அசையுகளால் அதை மறைத்து விடுகிறார் மக்கள் செல்வன்.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கமல், முதல் பாதியில் கர்ணனாகவும், இரண்டாம் பாதியில் விக்ரமாகவும் நடித்திருக்கிறார். குடிகாரன், மகனை நினைத்து கவலைப்படும் பாசமான தந்தை. பேரனை நினைத்து ஏங்கும் தாத்தா என நடிப்பில் பளிச்சிடுகிறார். அதுபோல், நடனம், ஆக்ஷன், என ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.
கமலுக்கு அடுத்தபடியாக பலருடைய கவனத்தை ஈர்த்து இருக்கிறார் பகத் பாசில். முதல் பாதி முழுவதும் திரைக்கதையை தன் வசப்படுத்தி இருக்கிறார்.
Cinetimee
படத்தின் முதல் 10 நிமிடம் மற்றுமே கமல் ஹாசன் வருகிறான் அதன் பின்னர் வரும் பகத் பாசில் படத்தின் முதல் பாதியை தன் வசம் எடுத்து அதை மிக சரியாக பயன்படுத்தியிருக்கிறார்.
விஜய் சேதுபதிக்கு மனைவிகளாக வரும் மகேஸ்வரி, மைனா தந்தினி, ஷிவானி நாயாயணன் ஒரு வார்த்தை மட்டும் பேசி விட்டு போகிறார்கள். இவர்கள் மூவரும் எதற்கு என்று நினைக்க வைக்கிறது.அதே போலா படத்தில் வரும் நரேன், திலக் ரமேஷ், அருள் தாஸ், என அனைவருமே படத்திற்கு பலமாக அமைந்துள்ளனர்.
போதைப்பொருள் என்ற ஒன்றை மையமாக வைத்து ஒரு ஆக்ஷன் படத்தை உருவாக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் தான் தேர்வு செய்த கதாப்பாத்திரங்களை திறமையாக வேலை வாங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட திரைக்கதையைப் பார்த்திருக்க மாட்டோம். அதிலும் மூன்று மிகப்பெரிய நடிகர்களான கமல் ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் மூவருக்கு சரியான இடம் கொடுத்தது படத்தின் வெற்றி.
படத்தின் இசையாகட்டும் பின்னணி இசையாகட்டும் அதற்காக நிறையவே உழைத்துள்ளார் அனிருத். இருந்தாலும் 1986 வெளியான பழைய விக்ரம் படத்தின் இசையை படத்தின் நடுவில் வரும் போது ஒரு உற்சாகம் பிறக்கத்தான் செய்கிறது.
ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் படத்தின் சண்டைக்காட்சிகளிலும் படத்தில் வரும் இரவு காட்சிகளை இவர் நிறைய நேரம் உழைத்து அந்த காட்சிகளை படமாக்கியிருப்பார்.
சண்டைப் பயிர்சி மாஸ்டர் அன்பறிவ் ஒரு ஒரு சண்டைக் காட்சியும் சும்ம திரையை அலற வைக்கிறது. படத்தின் எடிட்டர் பிலோமின் ராஜ் எதை வெட்டினால் படம் ஹிட் கொடுக்குமோ அதை செய்துள்ளார்.