News

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விக்ரம் !

Published

on

விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் மகான். இதை தவிர பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம், கோப்ரா ஆகிய படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.

இந்த நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணியில் ஒரு படம் உருவாகவுள்ளதாக கடந்த சில வருடங்களாக பேசப்பட்டு வருகிறது. சில வாரங்களுக்கு முன்னர் அதையும் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

அப்படத்தை கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. ஆனால் ரஞ்தித் பிர்சா முண்டா வாழ்க்கை வரலாற்றை இயக்கவுள்ளதால் இப்படம் திடங்குவதில் சற்று தாமதம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் விக்ரம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளாராம். இப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இல்லையெனில் மாரி செல்வராஜ் இருவரில் ஒருவர் இயக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Trending

Exit mobile version