News

முதலில் சியான் 60 இரண்டாவதுதான் கோப்ரா திடீர் முடிவு எடுத்த விக்ரம் !

Published

on

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தை தற்காலிகமாக சியான் 60 என்று அழைத்து வருகிறார்கள். இதை தவிர விக்ரம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகிவரும் கோப்ரா படத்திலும் நடித்து வருகிறார். மிக நீண்ட நாட்களாக தயாரிப்பிலுள்ள இத்திரைப்படத்தை முடிக்க முடியாமல் உள்ளது படக்குழு காரணம் கொரோனா வைரஸ்.

இந்த நிலையில்தான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரமுடன் இணைந்து சியான் 60 படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் அடுத்த மாதம் சியான் 60 படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து அந்த மாதமே முடிக்கவும் உள்ளனர் படக்குழு. ஒரே கட்டமாக இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு பின்னர் கோப்ரா படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள விக்ரம் முடிவு செய்துள்ளாராம்.

Trending

Exit mobile version