Connect with us
 

News

விக்ரம் படத்தின் வெளியீட்டு தேதி மார்ச் 14 அறிவிக்கிறது படக்குழு !

Published

on

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசனின் அடுத்த வெளித்திரைப் பயணமான ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்துள்ளன. விஜய் சேதுபத், மற்றும் பகத் பாசில் ஆகியோரும் இணைந்து நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் 2022- ஆம் ஆண்டின் அதிகம் எதிர்பாக்கப்படும் படங்களில் முக்கியமான திரைப்படமாகும்.

நடிப்பின் சிகரங்களான மூன்று நட்சத்திரங்களுடன் இன்னோரு நட்சத்திர பட்டாளமே இணைந்து 9 மாதங்களாக கடுமையாகப் பணியாற்றிருப்பதால் ‘விக்ரம்’ பல திரையுலக சாதனைகளைப் படைக்கும் திரைப்படமாக இருப்பதற்கான எல்லா அம்சங்களையும் கொண்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் ‘விக்ரம்’ திரைப்படத்தின் பிரதான படப்பிடிப்பு ஆக்ஸ்டு 2021-ல் தொடங்கியது. லாக்டவுன் காலகட்டத்தின் நெருக்கடிகள். புதிய வைரஸால் படப்பிடிப்பே கைவிடப்பக்கூடிய சூழல் ஆகியவற்றைக் கடந்து களிப்புக்கு அஞ்சாமல் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் படக்குழுவினர் தீவிரமாக உழைத்தனர். இந்த படத்தி தனிச் சிறப்பெ உலகநாயகன் வெள்ளித்திரையில் தோன்றுவதுதான். உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகப் படையினர் அந்தத் தருணத்துக்காக ஆரவாரத்துடன் காத்திருக்கிறார்கள்.

உச்ச நட்சத்திரங்களுடன் நரேன், செம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், மற்றும் காயத்ரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் படம் தியேட்டர்களில் ரீலீஸ் ஆகவிருக்கும் தேதியை மார்ச் 14 அன்று காலை 7 மணிக்கு அறிவிக்கவிருக்கிறார்கள். விக்ரம் திரைப்படத்தை பன்முக திறமையாளரான கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் இணைந்து தயாரிக்கிறார்கள்.