Connect with us
 

Uncategorized

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படம் !

Published

on

விக்ரம் நடிப்பில் கடைசியாக பிப்ரவரி மாதம் ஒ.டி.டி தளத்தில் வெளியான திரைப்படம் மகான். தற்போது அஜய்ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்திலும் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும் கவுதம் மேனனின் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார்.

இதை தவிர பா.ரஞ்சித் இயக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார். இப்படம் விக்ரமுக்கு 61-வது திரைப்படம். இப்படத்தின் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விக்ரம் நடிக்கும் 62-வது படத்தின் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை இயக்கவுள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் மிக விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.