News
முதல் ஆளாக விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவி !

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் வயநாடு மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடும் மழையால் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் 200க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் கேரளாவிற்கு பலரும் உதவி செய்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முதல் ஆளாக விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு இதை வழங்கியுள்ளார்.