News
விக்ரமின் கோப்ரா வெளியீட்டு தேதி நாளை அறிவிப்பு !

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘கோப்ரா’ கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடைபெற்றது காரணம் கொரோனா ஊரடங்கு.
விக்ரம் இதுவரையில் நடித்த படங்களிலே அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் இந்த கோப்ரா. இப்படத்தில் வில்லனாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதியை நாளை மாலை 6 மணிக்கு தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கவுள்ளது. இதற்கு முன்னதாக இப்படம் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.