News
சென்சார் சான்றிதல் பெற்றது விக்ரமின் மகான் !

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மகான். இவர்களுடன் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்க. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதல் வழங்கியிருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை வரும் பொங்கள் அல்லது ஜனவரி மாத இறுதியில் வெளியிட இருப்பதாகவும் ஓடிடி தளத்திலா இல்லை திரையரங்குகளிலா என்று தயாரிப்பு நிறுவனம் அறிவிக்காத நிலையில் ஒரு சிலர் மட்டும் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்று கூறி வருகின்றனர்.