Connect with us
 

News

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் விக்ரமின் மகான் !

Published

on

நடிகர் சியான் விக்ரம் அவருன் மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மகான். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க பிரபல தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித் குமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.

விக்ரமுடன் நடிகர் பாபி சிம்ஹா நடிகைகளான சிம்ரன் வாணி போஜன் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படம் முழுமையாக தயார் நிலையில் உள்ளதாம் தணிக்கை குழுவும் இப்படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். சுமார் 2 மணி நேரம் 43 நிமிடங்கள் ஓடக்கூடிய இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகுமா இல்லை ஓடிடி தளத்தில் வெளியாகுமா என்ற கேள்வி ரசிகர்கள் மதியிலில் இருந்து வந்த நிலையில். இப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகவுள்ளது.