News

ஆகஸ்ட் 15ல் வெளியாகும் விக்ரமின் தங்கலான் !

Published

on

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் தங்கலான். இப்படத்தில் விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியட் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் ஜூன் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை வெளியீட்டை தள்ளி வைத்தது படக்குழு. இந்த நிலையில் ஆகஸ்ட் 15ம் தேதி தங்கலான் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இருந்தாலும் இதனை இன்னும் தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்த வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version