Trailer
விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் பார்ட் 2 ட்ரெய்லர் வெளியானது !

விக்ரம் நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள வீர தீர சூரன் பார்ட் 2 படத்தின் அதிரடி மாஸ் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
விக்ரமுடன் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷாரா விஜயன், சித்திக் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். எச்.ஆர்.பிக்சர்ஸ் தாயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
டிரெய்லரில் விக்ரமை கொலை செய்ய ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்கள் தேடிக் கொண்டிருப்பத்துடன் ட்ரெய்லர் ஆரம்பிக்கிறது. இப்படம் முழுவதும் ஒரு நாள் இரவில் நடந்து முடியும் கதை என்பது இந்த ட்ரெய்லரை பார்க்கும் போது நமக்கு தெரிகிறது. அனல் பறக்கும் வசனம், மாஸ் காட்சிகள், தெறிக்க விடும் பின்னணி இசை என படத்தின் மேல் உள்ள ஆர்வத்தை தூண்டுகிறது.
கண்டிப்பாக ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விக்ரமுக்கு இப்படம் அதை கொடுக்கும் என கண்டிப்பாக நம்பலாம்.