Reviews

விருமன் – விமர்சனம்

Published

on

Movie Details

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் Viruman.

கார்த்தின் அம்மா சரண்யா – அப்பா பிரகாஷ்ராஜ். சரண்யா இறந்து போக அம்மாவின் இறப்புக்கு அப்பா பிரகாஷ்தான் காரணம் என்று கொலை வெறி கோபத்தில் இருக்கும் கார்த்தி. தன் அம்மாவின் இறப்பு இறுதி சடங்கிற்கு வராத தன் மூன்று அண்ணன்கள் என் அம்மா இறந்த வீட்டிற்கு வரவழைப்பேன் என்று சபதம் எடுக்கிறார் கார்த்தி.

பணம் மட்டும்தான் வாழ்க்கை என நினைத்து வாழும் பிரகாஷ்ராஜ். தான் என்ன சொன்னாலும் மாடு போல தலையாட்டும் மூன்று மகன்கள் இவர்களை திருத்தி பாசம் என்றால் என்னவென்று புரிய வைத்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கிராமத்து இளைஞன் வேடத்துக்கு சிறப்பாக பொருந்தியுள்ளார் கார்த்தி. இதற்கு முன்னர் வெளியான பருத்தி வீரன், கொம்பன் ஆகிய படங்களில் இவரின் நடிப்பை நாம் பார்த்து வியந்துள்ளோம். அதே போல இப்படத்திலும் சிறப்பாக பொருந்தியுள்ளார். பாசம் என்றால் பனி மலையாகவும் வீரம் என்று வந்தால் வீறு கொண்டு புயலாகவும் வருகிறார் கார்த்தி. கடவுள் செய்தாலும் தப்பு தப்புதான் என்று சொல்லும் இளைஞானக படம் முழுவதும் வலம் வருகிறார்.சில இடங்களில் கொம்பம், பருத்தி வீரன் கதாப்பாத்திரங்களும், பல இடங்களில் சூர்யாவின் நடிப்பும் நம் கண் முன் வந்து போகிறது.

அறிமுக நாயகியாக வரும் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு ஒரு நடிப்பு. நடிப்பை நன்றாக படித்து விட்டுதான் களத்திற்கு வந்துள்ளார் போல. இவரின் நடிப்பை பதிவு செய்யும் காட்சிகள் படத்தில் மிகவும் குறைவுதான் ஆனாலும் தனக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளார்.

கார்த்தின்யின் அப்பாவாக வரும் பிரகாஷ்ராஜ். கிராமத்தில் பெரிய மனிதன். ஆணாதிக்கம் கொண்ட ஒருவர் தான் சொல்வதை தன் பிள்ளைகள் உற்பட அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் கேட்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு கதாப்பாத்திரம்.

கார்த்தியின் தாய் மாமாவாக வரும் ராஜ்கிரண். படத்தின் மிக முக்கியமான கதாப்பாத்திரம் என்றாலும் இவரின் காட்சிகள் திரையில் குறைவுதான். ஆனாலும் இவர் சில இடங்களில் நம்மை கண்கலங்க வைக்கிறார்.

காமெடிக்கு வரும் சூரி சிரிக்க வைக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜின் இரண்டாவது மருமகள் மைனா கண்டிப்பாக நம்மை சிரிக்க வைக்கிறார் பல இடங்களில். வடிவுகரசி, சரண்யா, மனோஜ் பாரதி, வசமித்ரா, ராஜ்குமார், அருந்ததி, இளவரசு, என இன்னும் பல கதாப்பாத்திரங்கள்.

படத்தின் வில்லனாக வரும் ஆர்.கே.சுரேஷ் அவர்கள் கதையில் வில்லன் வேண்டும் என்பதற்காக இவரை வைத்தது போல உள்ளது.

யுவன் ஷங்கர் ராஜ பாடல்கள் நம்மை ரசிக்க வைக்கிறது. கிராமத்து படங்களுக்கு என் பின்னணி இசை என்றும் ஹிட் என்பதை மீண்டும் ஒரு முறை இதில் நிரூபித்துள்ளார். ஜாக்கியின் கலை இப்படத்தில் குறிப்பிட்டு கூற வேண்டிய ஒன்று. அதே போல செல்வகுமாரின் ஒளிப்பதிவும்.

கண்டிப்பாக முழு படமாக பார்க்கும் போது படத்தில் பல குறைகள் இருக்கத்தான் செய்கிறது. அப்பா – மகன் இருவருக்கும் இடையில் நடக்கும் மோதல் படத்தின் மைய்க்கருத்து அதை அனைத்து விதமான ரசிகர்களுக்கும் பிடிக்கும் விதமாக ஒரு கமர்ஷியம் படமாக கொடுத்துள்ளார் இயக்குநர் முத்தையா அவர்கள்.

என்னதான் பணம் கோடி கோடியாக இருந்தாலும் அண்ணன், அண்ணி, மருமகள், தம்பி, மாமா, மாமி என அனைத்து உறவுகளுடனும் வாழும் வாழ்க்கைதான் இனிமையாக இருக்கும் என்று சொல்லும் திரைப்படம்.
Viruman Review By Cine Timee

[wp-review id=”43544″]

Trending

Exit mobile version