Connect with us
 

News

ரூ.8 கோடியை தாண்டிய விருமன் முதல் நாள் வசூல் !

Published

on

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் Viruman.

Viruman திரைப்படம் கார்த்தி படங்களில் அதிக வசூல் செய்த படம் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் விருமன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

வெளியான முதல் நாள் மட்டும் ரூ.8.2 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் வெளியான சிவகார்திகேயனின் படமான டான் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ.9 கோடி வசூம் செய்திருந்தது. தமிழ் நாட்டில் வெளியான முதல் நாளில் அதிக வசூல் செய்த பட வரிசையில் Viruman 8-வது இடத்தில் உள்ளது.

இந்த அறிவிப்பினை விருமன் படத்தின் விநியோகஸ்தர் சக்திவேலன் அவர்கள் அதிகாரபூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.